இயற்கையை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லவே இல்லை. ஆம்..என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டாலும் நம் மூச்சுக்காற்றே நம்மை ஆரோக்கியமாக்கும் கண்ணாடி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே!
என்று திருமூலர் நமக்கெல்லாம் அருளி விட்டுச் சென்ற திருமந்திரத்தின் கூற்று நமது காற்று சாஸ்திரத்தைப் பற்றி உணர்த்தும். பொதுவாக சுவாச யோகத்தில் மூன்று படிநிலைகள் உள்ளன.
1.தோள்பட்டைசுவாசம்
2.மார்பு சுவாசம்
3.அடிவயிற்று சுவாசம்
இவையாவும் என்னவென்றால் நமது பிரான் என்னும் உயிர்நிலை சக்தியினை வசப்படுத்த செய்யும் ஒரு வகை கலை ஆகும். பிராணயாமத்தின் மூலம் தசை வாயுக்களும் சீரடையும் என்கின்றனர். பிராணயாமத்தின் நான்கு படிநிலைகளாவன
பூரகம்- மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்- மூச்சை உள் நிறுத்துதல்
ரேசகம்- மூச்சை வெளியிடுதல்
சூனியம் -மூச்சை வெளிவிட்ட பின்னர்.
இவ்வாறாக நம் தமிழர்கள் கண்ணுக்கு தெரியாத காற்றை கூட கலக்கச்சிதமாக கணித்து வைத்திருக்கிறார்கள் ஆயிரமாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பாகவே! தினம் தோறும் இந்த மூச்சுப்பயிற்சியை செய்தால் வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் எட்டிக்கூடப் பார்க்காது.