அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் பிரேசில் நாட்டில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.
உலக நாடுகளையெல்லாம் அச்சத்தில் நடுநடுங்க வைக்கும் ஒரு விஷயம் தான் இந்த வைரஸ். வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபகாலமாக பிரேசிலில் வைரஸ் பரவலானது அதிகரிப்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் நம் நாட்டு பிரதமரிடம் உதவி கோரியுள்ளார்.
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் உடனடியாக 20 லட்சம் கோவிஷீட்டு தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என பிரதமர் அலுவலக வட்டார செய்திக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன