இந்திய தலைநகர் டில்லியில் உள்ள அப்துல்கலாம் சாலையில் அமைந்துள்ளது இஸ்ரேல் நாட்டு தூதரகம். இந்த தூதரகத்தின் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் இன்று மாலை சுமார் 5.05 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
மேலும், இந்த வெடிகுண்டு வெடிப்பு குறித்த முழுமையான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. டில்லி வெடிகுண்டு வெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்புட்னும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தேவையான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.