ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இல்லை என்பதை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ரஜினி. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு பா.ஜ.க-வுக்குத்தான் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முருகன், “மதுரையில் பா.ஜ.க அலுவலகத்தை பயங்கரவாதிகள் சிலர் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகள் வேளாண் சட்டத்தை வரவேற்கிறார்கள். தி.மு.க-வில் ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளரா, கனிமொழியா அல்லது உதயநிதி முதலமைச்சர் வேட்பாளரா என்ற குழப்பம் தொடருகிறது. ஆன்மீக அரசியலும், தேசிய அரசியலையும் விரும்பியவர் ரஜினி. எனவே ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களின் ஆதரவு வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்குத்தான் இருக்கும்” என்றார்