மேற்கு வங்காளத்தில் உள்ள பிஷ்னுபூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம்பி யாக இருப்பவர் சவுமித்ர கான். இவரது மனைவி சுஜாதா மண்டோல் கான்.
தனது கணவர் 2019 தேர்தலில் எம்பி யாக வெற்றிபெற தான் கடுமையாக பாடுபட்டதாகவும், ஆனால் தன்னை கட்சி அங்கீகரிக்கவில்லை என்றும், தகுதியில்லாத மற்றும் ஊழல் செய்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றம்சாட்டி இரண்டு நாட்கள் முன்னர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி சுஜாதா மண்டோல் கான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் அவரது கணவரும் எம்பியுமான சவுமித்ர கான் அவரது மனைவி சுஜாதா மண்டோல் கானுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இனிமேல் உனது பெயருக்கு பின்னால் கான் என்று குறிப்பிட வேண்டாம் என்றும் சவுமித்ர கானின் மனைவி என இனி கூறத் தேவையில்லை எனவும், சவுமித்ரகான் தனது மனைவியை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருமண வாழ்க்கை சார்ந்த பல காரணங்களைக் கூறி விவாகரத்து நோட்டீஸை சவுமித்ர கான் சார்பாக அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.