தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்தப்பணிகளில் பாஜகவும் தீவிரம் செலுத்திவருகிறது. பாஜகவின் மாநிலத்தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின்பு நடந்தப்பட்ட வேல்யாத்திரை நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கிறது. தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் பாஜக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. அதிமுக தலைமையிடம் 40 முதல் 60 தொகுதிகள் வரை கேட்டுவருகிறது பாஜக. இந்தச்சூழலில் மற்றக்கட்சிகளை முந்திக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்துள்ளது பாஜக.
அந்தக்குழுவில் இருப்பவர்களின் பெயர்பட்டியலை பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இந்தக்குழுவில் முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.துரைசாமி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, பேராசிரியர் கனகசபாபதி, இராமஸ்ரீனிவாசன், கார்வேந்தன், ஜி.கே.நாகராஜ், சசிகலா புஷ்பா, எஸ்.எஸ்.ஷா, நாச்சிமுத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.