இமாச்சலப் பிரதேசத்தின் பாங் அணை ஏரி வன உயிரின சரணாலயத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் அதிக அளவில் பறவைகள் இறந்து வருகின்றன. இதற்கு பறவை காய்ச்சல் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமான பறவைகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று 215 புலம்பெயர் பறவைகள் அந்த சரணாலயப் பகுதியில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடை துறையினர் மற்றும் மருத்துவர்கள் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் காரணமாக பறவைகள் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.