கேரளா, மத்தியபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கேரளத்தில் ஆயிரக்கணக்கான வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவற்றை அம்மாநில அரசு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழகத்துக்கு கேரள கோழிகளை கொண்டுவர அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பறவை காய்ச்சலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. அதற்காக பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பஞ்சாப் மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15-ம் தேதி வரை கோழிகள், கோழி இறைச்சிகள் உள்ளிட்ட அனைத்தும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது