காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் புவணேஷ்வர் குமார் அடுத்த் 6 மாதங்களுக்கு எந்த போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.
ஐபில் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த புவனேஷ்வர் குமார் தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியின் இடையே விலகினார். தற்போது பெங்களூருவில் உள்ள தேதிய கிரிக்கெட் அகாடெமியில் குமார் பயிற்சி எடுத்து வருகிறார். அடுத்த மாதம் பயிற்சி முடிந்தாலும் புவணேஷ்வர் குமார் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்கும் ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
அடுத்த 6 மாதங்களுக்கு புவணேஷ்வர் குமார் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும், பந்து வீச்சு முறையை மாற்ற உள்ளதாகவும், ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உடலில் அழுத்தம் ஏற்படும் அதன் காரணமாகவே பந்து வீச்சு முறையை மாற்றுவார்கள். அதன் காரணமாகத்தான் புவணேஷ்வர் குமாரும் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.