நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று ஆப்பிள் . ஆனால் அந்த ஆப்பிளை நாம் எப்போதாவதுதான் சாப்பிடுகிறோம் அப்படி சாப்பிடுவதை விட தினமும் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.
தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நம் உடலானது நோயை எதிர்த்துப் போராடும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் ஸ்கர்வி நோய் வராமல் பாதுகாக்கிறது
இதேபோல் ஆப்பிளானது கண் புரை வராமல் பாதுகாக்கிறது. சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்கிறது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய மருந்தாகும். அதனால் முடிந்தவரை தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வாருங்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது