கொரோனா அனைவரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. லட்சக்கணக்காணோர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் கொரோனா பெயரை சொல்லி வங்கிப்பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்து கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது புதியதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று முன்பைவிட வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருசிலர் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து மக்களுக்கு போடப்பட்டு வருகிறது என சொல்லி மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்கின்றனர். தடுப்பூசி அளிக்க கோரி அழைப்புவந்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து ஆதார் எண்ணை சிலர் கேட்கிறார்கள். பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிடி வரும் என்று கூறி நம்முடைய விவரங்களை வாங்கி வங்கி தொகை ஆகியவற்றை கொள்ளை அடித்துவிடுகிறார். இதனால் இப்படிவரும் அழைப்புகளை மக்கள் நிராகரித்துவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.