சென்ற ஆண்டு இந்தியாவில் மிகவேகமாகப் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் போக்குவரத்துக்கள் அனைத்தும் முற்றாக முடங்கின. இருப்பினும் கொஞ்சம், கொஞ்சமாக போக்குவரத்துதுறை துளிர்விட்டு சேவையை தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ரயில் சேவையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ரயில்வே துறை.

இப்போது பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியில் சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்களில் இதுவும் இணைந்தது. இந்த நிலையில், ஜனவரி 31ம் தேதி முதல் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.