பொதுவாக வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. அதேபோல் எடை குறைப்பது முதல் பல்வேறு விஷயங்களுக்கான டயட்டில் முதலிடத்தைப் பிடிப்பது வாழைப்பழம்தான். வாழைப்பழம் காலை உணவுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பலருக்கு சாப்பாட்டிற்குப் பின் கட்டாயமாக வாழைப்பழம் சாப்பிடும் பழக்கமுண்டு.வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
வாழைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் என்ற விதத்தில் எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதுவே உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றது. ஏனெனில் வாழைப்பழத்துக்கு எடை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதிலும் தற்போதைய காலங்களில் கிடைக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழம் கண்டிப்பாக நாம் தவிர்க்க வேண்டும்.
இரவில் விழித்திருந்து வேலை பார்த்தவர்கள் நிச்சயம் இரவில் வாழைபழத்தை சாப்பிடவே கூடாது. வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவிலான அமினோ கார்போஹைட்ரேட் உங்கள் சோம்பல் உணர்வை ஏற்படுத்தும் மேலும் இரவில் தலை வலியை உண்டாக்கும்.
வாழைப்பழம் பொதுவாக மலச்சிக்கலைத் தீர்க்கும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். வாழைப்பழத்தை சாப்பிடுவோம் ஆனால் நிறைய வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு ஏற்படும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் அதிகமாக சாப்பிடும் போது மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதனால் அளவோடு சாப்பிடுவது நல்லது.