கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதல்கட்டமாக வாத்துகளுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. கூட்டம் கூட்டமாக வாத்துகள் இறந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரம் வாத்துக்கள் மற்றும் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகள் மற்றும் வாத்துக்கள் தமிழகத்துக்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் தமிழகத்திலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.