சிலநேரங்களில் வீட்டுசிங் அழுக்கு படிந்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதை நாம் வீட்டில் இருக்கும் சில பொருள்களைக் கொண்டே நிவர்த்தி செய்யலாம்.
இதற்கு முக்கியமாக நாம் பயன்படுத்த போவது பேக்கிங் சோடா. பேக்கிங் சோடா இதை சோடா உப்பு என்றும் கூறுவர் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளிலேயே சுலபமாகவே இது கிடைக்கும். இதுகூட வினிகர் ஒரு பாட்டிலை வாங்கி கொள்ளுங்கள். இந்த பொருட்களை வைத்து தான் சுத்தம் செய்யப் போகின்றோம்.
தண்ணீர் போகும் அந்த ஓட்டையில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை போடுங்கள், 1/4 கப் அளவில் வினிகரை ஊற்றி பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் ஊற்றிவிடுஙகள் அதன் பின்பு கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை, ஒரு கப் அளவு அந்த ஓட்டையில் பிரஷரோடு ஊற்றி விட கரப்பான் பூச்சி கூட வராது. அடைப்பு சுத்தமாக நீங்கி விடும்.
இதைப்போல் வாரம் ஒருமுறை உங்களுடைய சிங்கை நன்றாக காய வைத்து விட்டு, பேக்கிங் சோடாவை தூவி, கொஞ்சமாக வினிகரை தெளித்து விட்டு, ஒருநார் போட்டு சுத்தமாக தேய்த்து ஊற விட்டுவிட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் நன்றாக தேய்த்து, தண்ணீர் போட்டு கழுவிவிட்டால் சில்வர் சிங்க், கருப்பு கல்லால் செய்யப்பட்ட சிங்க், மார்பில் சிங்க், கிரானைட் சிங்க் என எல்லா வகையான சிங்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுத்தமாகி பளபளக்கும்