சென்னை புறநகர் பகுதிகளான செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் கிரெடிட ,டெபிட் கார்டுகளின் தரவுகளை ஸ்டீமர் கருவியின் மூலம் திருடி போலியான ஏடிஎம் கார்டுகளை தயாரித்து 16 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்துள்ளது.
அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலியான ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை மோசடி செய்து எடுப்பதை தீவிரமாக கண்காணித்து கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக பல்கேரியா நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த நிக்கலே (30) ,பொரிஸ் (30), லைவ்போமீர் ஆகியோரை அவர்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் அளித்த தகவலின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் ஒரே வாரத்தில் 16 லட்சம் பணத்தை வாங்கி அமெரிக்க டாலராக மாற்றி பல்கேரியாவுக்கு தப்பிச்செல்ல இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து கணினி, போலியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .அதில் பல்கேரிய நாட்டு வாலிபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மூன்று பேருக்கும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதனால் மூன்று பேரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்