ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை சுக்கிர பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். ஜோதிடத்தில் ஒருவருக்கு திருமண சுகம், திருமண யோகம், ஆடம்பரம், வசதி, அன்பு, அழகு, செல்வங்களின் அதிபதியாக பார்க்கப்படுபவர் சுக்கிர பகவான், ரிஷபம், துலாம் ராசிக்கு அதிபதி. இவர் ரிஷப ராசியில் அடுத்த ஒரு மாத காலம் ஆட்சி அதிபதியாக அமரப் போகிறார். இதனால் கடகம், கன்னி உள்ளிட்ட பல ராசியினர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறார்கள்.
சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு தன ஸ்தானத்தில் ஆட்சி பெற உள்ளார். இதனால் உங்களின் குடும்ப நிலை மற்றும் நிதி நிலை சிறப்பாக மேம்படும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தில் நிங்கள் எந்த ஒரு கடினமான முடிவையும் மிக எளிதாக எடுப்பீர்கள். வேலை, வியாபாரம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நல்ல அனுகூலம் தரும். உங்களின் வருமானம் உயர்த்துவதற்கான செயல்கள் நல்ல வெற்றியைத் தரும்.
குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு ஏற்படும். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்லுதல் என மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.