2021 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
இந்திய அரசு சார்பில் கோவாவில் வருடம் தோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான திரைப்பட விழா கடந்த நவம்பர் மாதம் 20 தேதி முதல் 28 தேதி வரை நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 24 வரை இந்த திரைபட விழா நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் வெகுஜென பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு அசுரன் திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறனால் உருவாக்கப்பட்டது.
இதே போல் கணேஷ் விநாயகன் இயக்கி விரைவில் வெளியாக உள்ள தேன் திரைப்படமும் இவ்விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.