பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செயற்கை இதயம் தயாரிக்கும் நிறுவனம் கார்மேட் (carmat). இந்த நிறுவனம் செயற்கை இதயம் தயாரித்து அதை விற்பனை செய்வதற்கான அனுமதிக்காக காத்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் செயற்கை இதயம் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. 2 வென்ட்ரிகுலர் குழிவுகள் மற்றும் ஒரு பயோமெம்பிரேன் அடங்கிய செயற்கை இதயத்தின் மொத்த எடை 900 கிராம்.
செயற்கை இதயத்தின் விலை இந்திய மதிப்பில் ஒரு கோடியே முப்பத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் இந்த இதயம் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதம் 10 இதயங்களை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.