பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லை அருகே இரண்டு ஊடுருவல்காரர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இன்று அதிகாலை பஞ்சாம் மாநிலம் அட்டாரி அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லை வழியாக இரண்டு ஊடுருவல்காரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் போது அவர்கள் இருவரையும் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களிடமிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அடர் பனிமூட்டம் நிலவுவதால் தேடுதல் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.