கடலூர் மாவட்டம் பழைய வண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அ சுரேஷ் (26). இவர் சென்னை புதுபேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சென்னை பெரியமெடில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த புதன் கிழமை ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு அந்த காவலர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த விடுதி பணியாளர்கள் பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அந்த அறையை திறந்து பார்த்த போது காவலர் சுரேஷ் படுக்கையில் பிணமாக கிடந்தார். அவரது அருகிலிருந்து விஷ பாட்டிலும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரியமேடு காவல்துறையினர் இறந்த சுரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு காவலரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர். முதல் கட்டவிசாரணையில் காவலர் சுரேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.