மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ’தலைவி’ என்ற பெயரில் திரைபடமாக இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும், ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் போன்று வேடமனிந்து வரும் அரவிந்த்சாமி தனது புகைப்படம் ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட இத்திரைபடத்தின் டீசரில் அரவிந்த்சாமி கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமான அரவிந்த்சாமி நடித்த நான் உங்கள் வீட்டு பிள்ளை என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் மிக தத்ரூபமாக இருப்பதாகவும் எம்ஜிஆர் நடித்த அசல் பாடல் போலவே உள்ளதாகவும் பலரும் இந்த டீசர் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் நடித்தது மிகப்பெரிய கவுரவம் மட்டுமல்ல மிகப்பெரிய பொறுப்பும் கூட என குறிப்பிட்டு அரவிந்த்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு இத்திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை புரட்சி தலைவரின் நினைவு தினமான இன்று மிக தாழ்மையுடன் வெளியிடுகிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்து கோடை விடுமுறை காலத்தில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.