அமெரிக்காவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் மீண்டும் அங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முக்கிய மாகாணமான கலிபோர்னியாவில், திடீரென தொற்று அதிகரிக்க நோயாளிகளுக்கு ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் கிறிஸ்துமஸ் விழாக்கால பருவமான இந்த காலகட்டத்தில், இந்த தற்காலிக மூடலானது வந்துள்ளது. ஐபோன் தனது ஐபோன் 13, புதிய ஐபேடுகள் மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம் என பலவற்றால், விற்பனை சமீபத்தில் களைகட்டியதாகவும், இதன் காரணமாக செப்டம்பர் காலாண்டில் இதுவரை இல்லாத அளவு 100 பில்லியன் டாலர் வருவாயினை கண்டதாகவும் கூறியிருந்தது.
கரோனாவுக்குப் பின்பு சமீபத்தில் தான் ஆப்பிளின் அமோக விற்பனை அதிகரித்து மீண்டுவர தொடங்கியுள்ள நிலையில், இந்த லாக்டவுண் நடவடிக்கையானது மீண்டும் வந்துள்ளதால் ஆப்பிளின் விற்பனை மீண்டும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும்நிலையில், மீண்டும் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.