இந்தியா-சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருகின்றது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இருதரப்பும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் லடாக் பகுதியில் சீனா 35 பீரங்கியை நிறுத்தியது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவும் தனது ராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளது .இந்த நிலையில் எந்த நொடியிலும் முழு அளவிலான போருக்கு தயாராகும் படி தனது நாட்டு ராணுவத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று உத்தரவு தெரிவித்துள்ளார்.இதனால் இந்தியா சீனா இடையே போர் அபாயம் அதிகமாக உள்ளது இது உலக அளவில் பெரும் பரபரப்பையும் போர்பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது