கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முடங்கிக் கிடந்த அனைத்து படப்பிடிப்புகளும் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சில மாதங்களாக கிடப்பில் கிடந்த அண்ணாத்த திரைப்படம் தற்போது தொடங்கி மிக வேகமாக தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படுவதால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் பயோ பபுல் என்ற தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர்.இதனால் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து முடியும் வரை யாருமே வெளியே செல்லக்கூடாது. 40 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை யாருமே வெளியே செல்லக் கூடாது என்பதுதான் நடிகர் ரஜினிகாந்தின் கட்டளை
விக்னேஷ் சிவன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இயக்கி வருகிறார் சமந்தா நடிக்க உள்ள காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. அவர் போட்ட கண்டிசன் படி அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விக்னேஷ் சிவன் தற்போது அந்த படத்தை இயக்கி வருகின்றார் என்னதான் ஒரே இடத்தில் இருந்தாலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனைப் பார்த்து கொள்ள முடியாமல் செய்துவிட்டது கொரோனா. விக்னேஷ் சிவனை பார்த்து சிங்கிள்ஸ் உடைய சாபம் உங்கள சும்மா விடுமா? என ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்