நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் என பிரபலமான அனிதா சம்பத் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிக்பாஸ் நிக்ழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் அனிதா சம்பத்தின் தந்தை ஆர் சி சம்பத் மாரடைப்பால் மரணமடைந்த்துள்ளார். தனது மகனுடன் ஷிர்டி சென்றுவிட்டு திரும்பி ரயிலில் வந்துக்கொண்டிருந்த சம்பத்துக்கு ரயிலிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எழுத்தாளாரன சம்பத்தின் உடல் பெங்களூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.