தமிழ் நாட்டின் வேலூர் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்தின் சித்தூர், திருப்பதி போன்ற இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. அதுபோல ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வேலூருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வழித்தடம் உரிமம் இல்லாமல் இயங்கியதாக ஐந்து ஆந்திர அரசு பஸ்களை வேலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகள், ஏழு தனியார் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகள் ஆந்திரா அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பதிலுக்கு பதில் என்ற ரீதியில் ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்த சம்பவம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.