டிடிவி தினகரனின் தலைமையில் இயங்கும் அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அமமுகவின் பொதுசெயலாளார் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராசிபுரம் தனித் தொகுதி முன்னாள் எம்.பி அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, சைதாப்பேட்டை முன்னாள் அமைச்சர் செந்தமிழன், ஸ்ரீரங்கம் முன்னாள் அரசு கொறடா மனோகரன்.
மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன், சோளிங்கர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன், வீரபாண்டி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம், உசிலம்பட்டி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, அரூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், பொள்ளாச்சி தொகுதியில் முன்னாள் எம்.பி சுகுமார், தருமபுரி தொகுதியில் அமமுக அமைப்பு செயலாளர் டி.கே.ராஜேந்திரன், புவனகிரி தொகுதியில் அமைப்புச் செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோர் முதல்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.