தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இந்த படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று அவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த நடிகை அமலாபாலுக்கு தொடர்ந்து கிடைத்த நல்ல படங்களின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது .
இன்றளவும் இவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருப்பது மைனா என்றே சொல்லலாம். அதன் பிறகு தெய்வத்திருமகள் மற்றும் தலைவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் இயக்குனர் விஜயுடன் காதல் வசப்பட்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்திலே முடிவடைந்து விவாகரத்து செய்தனர். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை அமலாபால் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தை எப்பொழுதும் மிக ஆக்டிவாக வைத்துக் கொள்வார்.

சோசியல் மீடியாக்களில் அவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வரும். அதில் தற்போது ஒரு புகைப்படம் மிக வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் அவர் நீரில் நனைந்தபடி கடற்கரையில் அரை டவுசரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்…