கரோனா காலமான இப்போது நீங்கள் நிச்சயம் ஜாக்மாவைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஆம், பொருளாதாரரீதியில் சுணங்கிப்போய் இப்போது பலரும் மனம் சோர்வுற்று இருக்கும்காலம் இது. விடாமல் முயற்சி செய்தால் வெற்றியை ருசிக்கலாம் என்பதற்கு ஜாக்மாவின் வாழ்வே உதாரணம். அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளரான ஜாக்மா குறித்து தெரிவோம்..வாருங்கள்..
1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி, சீனாவில் உள்ள ஹாங்ஸ்வு ப்ரோவின்ஸ் என்ற இடத்தில் அலிபாபா நிறுவனர் ஜாக்மா பிறந்தார். பள்ளியில் படிக்கும் பருவத்தில் இருந்து பட்டம் பெற்று வேலைக்குச் செல்வதுவரை அனைத்திலும் தோல்வியையே சந்தித்துள்ளார் ஜாக் மா. குறிப்பாக இவர் வேலைக்காக விண்ணப்பித்த 30 வெவ்வேறு நிறுவனங்களில், ஒரு நிறுவனம் கூட இவரைத் தேர்வு செய்யவில்லை.
பல முயற்சிக்குப் பின்னர் சீனாவின் அரசு சம்மந்தப்பட்ட வேலையில் குறுகிய காலம் பணிபுரிந்த ஜாக் மா, அந்த வேலை மூலமாக கிடைத்த தொடர்புகளை அடித்தளமாக வைத்து 18 நபர்களை தேர்வுசெய்தார் அவர்களின் திறமைகளை பயன்படுத்தி தனது வீட்டிலையே அலிபாபா எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.பின்னர் ஜாக்மா வின் வழியில் அவர்கள் அனைவரும் வெற்றிக்கனியை ருசித்தனர். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் அவரின் அலிபாபா நிறுவனத்துக்கு நீதி மறுக்கப்பட்ட சமயத்திலும் கூட ஜாக்மாவின் விடா முயற்சியால் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் சாப்ட் பேங்க் மூலம் முதலீடுகள் பெற்றார்.
இந்த முதலீட்டின் மூலம் சீனாவில் அலிபாபா நிறுவனத்தை மேலும் வலுவாக்கி சர்வதேச அளவுக்கு விரிவடைய வழிவகுத்ததார் ஜாக். இந்த தொடர் செயல்பாடுகளினால் கடந்த 2014 ஆண்டுடைய உலகின் மிகப் பெரிய ஐ.பி.ஓ ஆனது அலிபாபா. பின்னர் நியூயார்க் பங்குச்சந்தையிலேயே 25 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டினார்.