முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகாவின் முன்னாள் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்த மு க அழகிரி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளு அம்மாவை சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது சட்டப்பேரவை தேர்தலில் தனது நிலைபாடு குறித்து முடிவெடுக்க 2021 ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். ஆதரவாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி தனது தேர்தல் நிலைபாடு இருக்கும் என்று கூறினார். ரஜினியை சந்திப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆண்டுதோறும் ரஜினியின் பிறந்த நாள் அன்று அவரை சந்தித்து வாழ்த்து கூறுவேன், இந்த ஆண்டு சந்திக்கமுடியவில்லை மேலும் அவர் தற்போது சென்னையில் இல்லை, அவர் சென்னைக்கு வந்த பின்னர் அவரை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் கட்சி தலைவாரானதுக்கு அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஸ்டாலின் திமுகவின் தலைவராக தேர்வானதுக்கு பின்னர் அழகிரி தனது தீவிர அரசியல் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டார்