அஜித் கைவிட்ட விக்னேஷ் சிவனுக்கு அவரது ஆஸ்தான ஹீரோவான விஜய் நடிகர் வாய்ப்பளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சிம்புவால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் காலடி இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன். இவர்கள் கூட்டணியில் வெளியான போடா போடி திரைப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இதற்கு அடுத்தபடியாக நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படம் தான் சினிமாவில் அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது.
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் ரிலீசான நானும் ரவுடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது விக்னேஷ் சிவனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இதன்பின் சூர்யாவை வைத்து விக்கி இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தோல்வியடைந்ததால், சறுக்கலை சந்தித்த விக்கிக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் அவரின் ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.