கரோனாவின் தொடக்கத்தில் என்ன மாதிரியான சூழலை எதிர்கொண்டோமோ அதே போல் சூழல் மீண்டும் தொடங்கியுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரால் புதுவகை கரோனா வைரஸ் பரவிவருகிறது. இதனால் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவை 31 ஆம் தேதிவரை ரத்தாகி உள்ளது. அதேபோல் புதிய வகை கரோனா பரவல் நிலவும் பிரிட்டனிலிருந்து நவம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் தாயகம் திரும்பியோர் தங்களில் கடந்த இருவார பயணவிபரங்களைக் கொடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து 25 ஆம் தேதி முதல் வந்தவர்கள் அந்த, அந்த மாநில அரசுகளுக்கும், நோய் தடுப்பு அலுவலகத்துக்கும் தகவல் கொடுக்கவேண்டும். இதேபோல் டிசம்பர் 21 முதல் 23 ஆம் தேதிவரை வரும் அனைத்து பயணிகளுக்கும் ஏர்போர்ட்டிலேயே விரைவு பரிசோதனை நடக்கிறது. அதில் நோய்தொற்று உறுதி செய்யப்படாவிட்டாலும், வீட்டு தனிமைக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவர்களில் தொற்று உறுதியானோருக்கு தனிமைப்படுத்துதல் முகாமும் அமைக்கப்படுகிறது. புதிய தொற்றுக்கு உள்ளானோர் 14 நாள்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுகின்றனர். 14வது நாளில் தொற்று இல்லை எனில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடயே லண்டணில் இருந்து டில்லி வந்த 6 பயணிகளுக்கும், பிரிட்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த 7 பேருக்கும், லண்டனில் இருந்து குஜராத் வந்த 4 பயணிகளுக்கும், பிரிட்டனில் இருந்து கல்கத்தா வந்த விமானத்தில் இருவருக்கும் நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய இளைஞர் ஒருவருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டது.
கரோனா மறுபடியும் முதல்ல இருந்தா? என கேட்கும் நிலைக்கு நகர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.