தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவர்ச்சி கடலாக வளம் கொண்டவர் தான் நடிகை ஷகிலா. இவருடைய படங்கள் எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களை முறியடிக்கும் அளவுக்கு வசூல் குவித்து தள்ளும். மேலும் இவருடைய புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வீதியில் ஒட்டி இருப்பதை பார்த்து ரசிக்காத ஆட்களே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சகிலா திரை உலகிற்கு வந்த காரணம் என்று பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம் ஷகிலா என்ற பெயரிலேயே இந்தியில் பிரபல இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவரால் உருவாக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். ஷகிலா திரைப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளில் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஷகிலா படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சகிலா படத்தின் பிரஸ்மீட் நடந்த போது அப்போது நடிகை சகிலா கலந்து கொண்டு பேசியதாவது தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு நான்கு வயதிலிருந்து 40 வயது வரை இருக்கும் ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம் என்றும்,அவருடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் இனிவரும் நடிகைகளும் பெண்களும் என்னைப்போல் ஏமாந்துவிடக் கூடாது என்றும் சம்பாதிக்கும் போது யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாந்து விடாமல் தனக்கென சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் குஷ்பு போல அரசியலுக்கு வர அதிகம் ஆர்வம் இருப்பதாகவும் மக்களுக்கு நல்லது செய்யும் ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை காண்பதற்காக அவருடைய ரசிகர்கள் மிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்