அரசியலும் சினிமாவும் வேறுபட்டு இருந்தாலும் இரண்டையும் ஒன்று சேர்ந்து இணைப்பதற்காக இன்னும் பலபேர் பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கமலஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.இந்த நிலையில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களது மனம் சார்ந்த கட்சியில் இணையப் போகிறார்கள் என உண்மைகளும் வதந்திகளும் கலவையாக வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின. அண்மைக்காலமாக பல நடிகர், நடிகைகள் ஏராளமானோர் தங்களுக்கு பிடித்த கட்சிகளில் இணைந்து வருகிறார். அந்த வகையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார். பிரவீனா குறித்துப் பரவிய இந்தத் தகவலை அவர் மறுத்துள்ளார். பிரவீனா அரசியலில் இணையப்போகிறார் என்பது பொய்யான செய்தி என அறிந்த ரசிகர்கள் மன வருத்தத்தில் இருக்கின்றனராம்.