தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகனாக வலம் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாந்தனு. இவர் சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் சினிமாவில் இன்று வரை தனக்கென்று பெரிய இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடுகிறார். இவர் கதாநாயகனாக நடித்த எந்த ஒரு திரைப்படமும் தமிழ்சினிமாவில் பெரிய அளவிற்கு ஹிட் ஆகவும் இல்லை.
இதனால் நடிகர் சாந்தனு படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கி விட்டார் இவர் துணை நடிகராக நடித்து கடைசியாக வெளியான “வானம் கொட்டட்டும்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள “மாஸ்டர்”திரைப்படத்திலும் துணை நடிகராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தினை சாந்தனுவும் தனக்கு சினிமாவில் ஒரு ரவுண்ட் வாங்கித்தரும் என முழுவதுமாக நம்பி இருக்கிறார்ர் அதற்கு முன்பாகவே அதிஷ்டவசமாக ஒரு வெற்றி கிடைத்துள்ளது.
சாந்தனு நடிப்பில் தற்போது வெளியான பாவக் கதைகள் என்னும் வலைத்தொடரை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகர் விஜயும் இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய்யை பொருத்தவரை திறமையுள்ள நடிகராக யார் இருந்தாலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது நடிப்பைப்பார்த்துவிட்டு அவருடைய கருத்தையும் தனது பாராட்டையும் தெரிவிக்க தவறுவதில்லை.
அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சாந்தனு நடித்த பாவ கதைகள் பார்த்துவிட்டு நடிகர் விஜய் நடிகர் சாந்தனுவுக்கு போன் பண்ணி உனக்கு இத்தனை திறமைகள் வைத்துவிட்டு ஏன் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறாய்… பட்டையை கிளப்பி இருக்கீங்க நண்பா என பாராட்டையும் தெரிவித்துள்ளதாக நடிகர் சாந்தனு பெருமிதமாக கூறியுள்ளார்