நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்ப்டியான சூழலில் இவருடன் சத்யராஜ்ம் இணையக்கூடும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புரட்சித் தமிழன் என்னும் அடையாளத்தோடு தமிழ்த்திரையுலகில் முப்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யாஇந்தியாவில் உள்ள சிறந்த ஊட்டச்சத்து வழிகாட்டிகளில் ஒருவராக உள்ளார். சிபிராஜ் படங்களில் நடித்து வரும் நிலையில், திவ்யாவோ திரையில் வந்தது இல்லை.

உலக அளவில் பிரசித்தி பெற்ற தொண்டு நிறுவனமான அக்ஷயபாத்திரம் அமைப்பின் தூதுவராக இருக்கிறார் திவ்யா. நியூட்ரீசியனான திவ்யாவுக்கு குழந்தைகள் காலை உணவை திருப்தியாக சாப்பிட்டால் தான் மதிய உணவு கிடைக்கும் வரை பள்ளிப்பாடத்தில் கவனம் செலுத்துவார்கள் என்பது எண்ணம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.
இதன் அடுத்தகட்டமாக அக்ஷயபாத்திரம் தொண்டு நிறுவனமும், சென்னை மாநகடாட்சியும் சேர்ந்து அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றார். சீக்கிரமே இவர் அரசியலுக்கு வருவதை சேவை அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.