முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே பேன்ஸ் கிளப் வைத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.
அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பேமஸ் ஆனவர் சித்ரா. இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்துதான் சீரியலில் நடிக்க வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த சித்ராவின் ‘கிராமத்து மொழிநடைப் பேச்சு’ அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும். தமிழகம் முழுவதுமே பரவலாக சித்ராவுக்கு ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில் சித்ரா திடீரென நட் சத்திர விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நம் அனைவரும் தெரிந்ததே. இது சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் அவருடன் இருந்த அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையின்போது நடிகை சித்ரா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்ட தகவல் வெளிவந்தது.
