விஜய் தொலைகாட்சியில் கடந்த நூறு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துவந்தது. நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கினார். அதில் திரை பிரபலங்கள் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். அதில் ஆரி அர்ஜூனன், பாலாஜி முருகதாஸ், ரியோராஜ், ரம்யா பாண்டியன், சோம் சுந்தரம் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இறுதிப் போட்டி முடிவு நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன் வெற்றியாளர்களை அறிவித்தார். தொடர்ச்சியாக 6 மணி நேரம் இந்த நிறைவு நிகழ்ச்சி நடந்தது. பிக் பாஸ் போட்டியில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதால் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும், பாலாஜி முருகன், ரியோராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோம்சேகர் ஆகியோர் வெற்றியாளர் வரிசையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.