கடந்த ஆண்டு வைரசின் தாக்கம் காரணமாக இந்த உலகமே ஸ்தம்பித்துப் போனது. ஒரு வழியாக வைரஸின் பிடியிலிருந்து உலகத்தை காப்பாற்றுவதற்காகவே தோன்றியதுதான் தடுப்பூசிகள்.உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. இந்த தடுப்பூசிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்து மக்களை வைரஸ் இடம் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது வரை 46 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 97% சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆவர். மேலும் அவர்கள் மத்திய அரசின் நடைமுறைகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை என 11% பேர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.