10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்திற்கு பிறகு தற்பொழுது பள்ளி செயல்பட தொடங்கி இருக்கிறது. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.இந்த நிலையில் மாணவர்களுக்கான ஒரு இனிப்பான செய்தியை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பாடத்திட்டமானது தேவைக்கு ஏற்ப சில சதவிகிதம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்ற சேதிதான் அது.
ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 9ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டங்களும் இப்பொழுது குறைபக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பிற்கு 50% வரை பாடத்திட்டங்களை குறைக்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்.
ஏற்கனவே மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.