விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தானமாக ரத்தம் பெற்று ஏற்றப்பட்டது. அந்த ரத்தம், எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவருடையது என்பது தெரியாமல் அதை கவனக்குறைவாக ஏற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் தன்னால் ஒரு பெண் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்து மன உலைச்சலாகி ரத்தம் கொடுத்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். 2019 ஐனவரியில் அந்தப்பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லாத பெண்குழந்தை பிறந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து அந்தப்பெண்ணுக்கு அரசு வேலை, 25 லட்சம் இழப்பீடு, 400 சதுர அடிக்கு குறையாத இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு, தனியாக குடிநீர் இணைப்பு, ஸ்கூட்டர் ஆகியவை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப்பெண்ணுக்கு சத்தான உணவு சாப்பிட 7500 ரூபாயும், அவரது கல்விக்கேற்ற வேலை கொடுக்கவும் செய்வது குறித்து அரசு நாளைக்குள் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது