தமிழகத்தில் சென்னை புழல், திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை, மதுரை உள்ளிட்ட 9 மத்திய சிறைச் சாலைகளில் பெண்களுக்காக ஐந்து தனி சிறைச்சாலைகள், 9 மாவட்ட சிறை, 58 ஆண்களுக்கான கிளைச் சிறை, 8 பெண்களுக்கான கிளை சிறை, இரண்டு ஆண்களுக்கான தனிச் சிறை 12 சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளி 3 திறந்த விழிச்சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கின்றன
இவற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிலகைதிகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் ,சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட உடல் கோளாறு இருப்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் காரணமாக்ச் தமிழக சிறைகளில் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு மட்டும் 70 கைதிகள் இறந்துள்ளனர். மேலும் மத்திய சிறையில் மட்டும் கடந்த ஆண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது குளிர்காலம் என்பதால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கின்றது. எனவே ஆஸ்துமாவால் அவதிப்படும் கைதிகளுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்