சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதி விடுவிக்கப்பட்ட சசிகலா தொடர்ந்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆன சசிகலா பெங்களூரில் ஓய்வில் உள்ள. அவர் தமிழகம் வரும் தேதி உறுதியாக கூறப்படாத நிலையில் அ.ம.மு.க துணைப்.பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அதுகுறித்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியலர்களிடம் பேசிய தினகரன், “சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வருகிறார். சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம். அதற்காக நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவோம். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள். அவர்கள் சசிகலாவிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்” என்றார்.