புதுடெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் இந்த குளிர்காலத்தில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் அதன்படி அவர்கள் டென்ட் அமைத்து ஒரு இடத்தில் போராடி வந்தாலும்,அவர்கள் அனைவரையும் மழையும் குளிரும் வாட்டி எடுக்கிறது.
இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி மரணம் அடைவதாக விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அவர்களது கோரிக்கை எவ்வளவு தான் நிறைவேறும் என்று தெரியவில்லை. அவர்களுக்கு ஆதரவாக பல குரல்கள் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கை விடாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டு தான் வருகின்றனர்.