உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவில் வூகான் நகரில் உதித்த வைரஸ் இன்று உலகின் 218 நாடுகளில் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி மீண்டும் வேறு ஒரு கோணத்தில் நம்மை அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் என கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 817 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் அடிப்படையை இனி பார்ப்போம்.
அமெரிக்கா – 1,39,71,321
இந்தியா – 1,01,29,111
பிரேசில் – 72,77,195
ரஷியா – 28,54,088
துருக்கி – 22,27,927
இனியும் கொரோனாவுக்கு எதிராக விழிப்போடு இருப்போம். நோய் பரவலைத் தவிர்ப்போம்.