ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மெல்போனில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை நடத்த இருந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை இது பெரிதும் ஏமாற்றியது.
இவ்விரு அணிகளுக்கு இடையே 40 ஓவர் அடிப்படையில் சர்வதேச போட்டி ஒன்று 1971ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் வாரியம் நடத்தியது.இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 190 ரன்களை ஆல்-அவுட் செய்யப்பட்டது. இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் எட்டிப் பிடித்தது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கண்டுகளித்தனர். இதுதான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உதயமாவதற்கு அடித்தளமாகவும் இருந்தது. அத்துடன் அது முதலாவது ஒரு நாள் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒருநாள் போட்டி அறிமுகமாகி நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதுவரை 4526 ஒருநாள் போட்டிகள் நடைபெற்று உள்ளது இதில் அதிகபட்சமாக 990 ஒருநாள் போட்டியை இந்திய அணி விளையாடி சாதனை படைத்துள்ளது.