ஒரு நாட்டில் உள்ள ரிசர்வ் வங்கியின் வளம்தான் அந்நாட்டின் நிதியியல் நிலைமையை நிலைநாட்டி உலகறிய செய்கிறது. பொதுவாக ஒரு நாட்டின் பணப்புழக்கம் அனைத்தும் அந்நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
இந்தியாவின் மத்திய வங்கியே ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஆகும். இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.அந்த சமயத்தில் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மக்களும் திண்டாடி போனார்கள்.அதேபோல 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் போவதாக ஒரு தகவல் உலா வருகிறது. அந்த தகவலை மறுத்து பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.