வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போதே இருவரும் காதலிக்கவும் செய்தனர். இந்தப்படத்தின் போது சிம்பு, நயனை அடித்த லிப் லாக் லீக்காகி கடும் சர்ச்சையானது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சிம்பு_நயன்தாரா காதல் திடீரென பிரேக்கப் ஆனது.
காதலர்கள் பிரிந்த பின்பும் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன் தாரா இப்போது விக்னேஷ் சிவனை லவ் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென சிம்புவோடு இருக்கும் புகைப்படம் வைரல் ஆகியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை