மதுரை மருத்துவ கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கரோனா இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருடன் விடுதியில் தங்கி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (23 டிசம்பர்) மேலும் ஒரு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மதுரை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.